65 வயது ஆணை திருமணம் செய்தவர் தானே நீங்க..? மஹுவா மொய்த்ராவை தாக்கி பேசிய கல்யாண் பானர்ஜி… பெரும் சர்ச்சை..!

By Soundarya on ஆனி 30, 2025

Spread the love

கொல்கத்தாவில்   சட்டக் கல்லூரியில் சட்ட மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தால் கொல்கத்தாவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. எதிர்க்கட்சிகள் இதனை விமர்சனம் செய்து வரும் நிலையில், டி.எம்.சி. தலைவர்களிடையே ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வார்த்தைப் போர் வெடித்துள்ளது. இருப்பினும், கட்சி அதன் தலைவர்களின் சர்ச்சைக்குரிய அறிக்கைகளிலிருந்து விலகி உள்ளது. இதற்கிடையில் கல்யாண் பானர்ஜியின் அறிக்கைகளுக்கு மஹுவா மொய்த்ரா கண்டனம் தெரிவித்தார். அதாவது மஹுவா கல்யாண் பானர்ஜியை பெண்களுக்கு எதிரானவர் என்று அழைத்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக, கல்யாண் பானர்ஜி  பதிலடி கொடுத்துள்ளார்.  அதில், ” மஹுவா மொய்த்ரா தேனிலவுக்குப் பிறகு இந்தியா திரும்பியதாகவும், இப்போது என்னைத் தாக்கத் தொடங்கியதாகவும் கூறினார். அவர் என்னை பெண்களுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டியுள்ளார்? ஆனால் அவர் யார்? அவரே தனது 40 வயது திருமணத்தை முறித்துக் கொண்டு 65 வயது ஆணைத் திருமணம் செய்து கொண்டார். இதைச் செய்வதன் மூலம், அவர் பெண்களை காயப்படுத்தவில்லையா? நாட்டின் பெண்கள் இதை முடிவு செய்வார்கள் என்று கூறியுள்ளார். மஹுவா மொய்த்ரா சமீபத்தில் முன்னாள் பிஜேடி எம்பி பினாகி மிஸ்ராவை மணந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.