தளபதி விஜயின் முடி உதிர்வுக்கு இதுதான் காரணமா?… பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

By Nanthini on ஆனி 30, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தான் விஜயின் சினிமா வாழ்க்கையில் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில் சினிமாவிலிருந்து மொத்தமாக விலகுகிறார். இதனிடையே சமீப காலமாக விஜய் குறித்த நிறைய செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

விஜய்ணா முடி ஒரிஜினலா இல்லை விக்கா?: உண்மையை சொன்ன தேவ் சக்திவேல்-Popular hairstylist reveals the truth about thalapathy Vijay hairstyle-Samayam Tamil

   

அதிலும் குறிப்பாக ஒரு வருடமாக விஜய் விக் வைத்துக் கொண்டுதான் நடித்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு முறை விஜயை பார்க்கும் போதும் அவர் ஹேர் ஸ்டைல் வித்தியாசமாக இருப்பதால் சந்தேகம் மேலும் வலுத்து உள்ளது. இவ்வாறு பல சர்ச்சைகள் போய்க்கொண்டிருக்கும் நிலையில் விஜய்க்கு சர்க்கரை நோய் இருப்பதாக பிரபலம் சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 51 வயதாகும் விஜய் தன்னுடைய உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

   

விஜய்க்கு வழுக்கை தலையா.? நீண்ட நாள் மர்மத்திற்கு விடை தந்த விஜய்… - Dinaseval News

 

மற்ற நடிகர்களை காட்டிலும் தன்னுடைய உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இப்படியான நிலையில் விஜய்யின் முடி உதிர்வுக்கு காரணம் சர்க்கரையின் அளவு அதிகமானது தான் என்று வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இதனால் விஜய் மருத்துவ சிகிச்சை எடுத்து வரும் நிலையில் உணவு பழக்க வழக்கங்களில் மிக கவனமாக இருப்பதாகவும் இரவு இரண்டு இட்லிக்கு மேல் சாப்பிடுவது இல்லை எனவும் கூறியுள்ளார். இவர் சொல்வது உண்மையா என்று ரசிகர்கள் அதிர்ச்சியாக கேட்டு வருகிறார்கள். ஆனால் விஜய் தரப்பிலிருந்து இதுவரை தெளிவான எந்த ஒரு அறிக்கையும் வெளியாகவில்லை.