தவெகவில் இணையும் முக்கிய பெண் நிர்வாகி…. விஜய்யின் மாஸ்டர் பிளான்… ஆட்டத்தை ஆரம்பித்த தளபதி….!

By Nanthini on கார்த்திகை 21, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றார். சமீபத்தில் கரூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய்க்கு அரசியலில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இருந்தாலும் அதனை சட்டரீதியாக கையாண்டு வரும் விஜய் தனது கட்சியை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். அதேசமயம் கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளாமல் இருந்த நிலையில் வருகின்ற டிசம்பர் மாதத்தில் சேலத்தில் தனது தேர்தல் பரப்புரையை மீண்டும் விஜய் தொடங்க உள்ளார். அதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் பல்வேறு யூகங்களுக்குப் பிறகு நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மாற்றுக் கட்சியில் இருந்து வரும் நிர்வாகிகளை தங்கள் கட்சியில் இணைப்பதற்கு விஜய் சற்று தயக்கம் காட்டி வரும் நிலையில் அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது தேர்தல் நெருங்க நெருங்க மாற்றுக் கட்சியினர் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.

   

அந்த வகையில் காளியம்மாள் உடன் டீலிங் முடிந்துள்ளதாகவும் அவர் விரைவில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கட்சிக்குள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காளியம்மாளை கட்சிக்குள் நுழைக்க விஜய் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் SIR பணிகளுக்கு எதிராக தமிழக வெற்றிக்கழகம் நடத்திய போராட்டத்தில் பெண் நிர்வாகிகளின் பேச்சு கட்சிக்கு வலு சேர்த்த நிலையில் தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முயற்சியில் விஜய் இறங்கியுள்ளார். அதன்படி சிறந்த பேச்சாளரான காளியம்மாளை கட்சியில் களம் இறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இவர் மீனவர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த வாக்குகளையும் கணக்கு போட்டு விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.