Connect with us

ஒரு வாழைப்பழத்திற்கு பின்னால் இவ்ளோ வலி இருக்கான்னு… கண் கலங்கி பேசிய கலையரசன்…

CINEMA

ஒரு வாழைப்பழத்திற்கு பின்னால் இவ்ளோ வலி இருக்கான்னு… கண் கலங்கி பேசிய கலையரசன்…

கலையரசன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார். இவரது முழு பெயர் கலையரசன் ஹரிகிருஷ்ணன் என்பதாகும். இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாள திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். எஸ்ஆர்எம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறையில் பட்டம் பெற்ற கலையரசன் 2010 ஆம் ஆண்டு அர்ஜுனன் காதலி படத்தில் தோன்றியதன் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார்.

   

பின்னர் 2010 ஆம் ஆண்டு நந்தலாலா, 2012 இல் முகமூடி, அட்டகத்தி 2013இல் மதயானை கூட்டம் போன்ற திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார் கலையரசன். அடுத்ததாக 2014 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் திருப்புமுனையை பெற்றார் கலையரசன்.

   

மெட்ராஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை தொடர்ந்து சினிமாவில் பல வாய்ப்புகளை பெற்றார் கலையரசன். தொடர்ந்து அன்பே, உறுமீன், கபாலி, முப்பெரிமாணம், தானா சேர்ந்த கூட்டம், ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, கழகத் தலைவன், 10 தல, hotspot போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் கலையரசன்.

 

தற்போது மாரி செல்வராஜ் இயக்கி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழை திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கலையரசன். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக அனைவரின் பாராட்டுகளை பெற்று வரும் கலையரசன் தற்போது ஒரு நேர்காணலில் இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவங்களையும் அதனால் தான் அறிந்து கொண்ட பல விஷயங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டு உள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால் இந்த படத்துக்காக நடிப்பையும் தாண்டி நிறையவே உழைத்து இருக்கோம். நமக்கு தெரிஞ்சது வாழைப்பழம் மட்டும் தான். எனக்கெல்லாம் ஒரு வாழைப்பழம் சாப்பிட தான் தெரியும். ஆனா அந்த வாழைப்பழத்துக்கு பின்னாடி எவ்ளோ கஷ்டம் இருக்கு அதை விளைவிக்கிறதுக்கு எவ்வளவு பாடுபடனும், அதையும் தாண்டி அந்த வாழைப்பழத்தை விற்பனைக்கு நம்ம கொண்டுவர அதை சுமந்துட்டு வர்றது எவ்வளவு கஷ்டம் அந்த அதுக்கு பின்னாடி இருக்க உழைப்பு சுரண்டல் ரத்தங்கள் அதெல்லாம் எனக்கு இப்போதான் புரிஞ்சது. இந்த மாதிரி கஷ்டத்தை யாருமே படக்கூடாதுன்னு தான் நான் சொல்லுவேன் என்று கண்கலங்கி பேசியிருக்கிறார் கலையரசன்.

More in CINEMA

To Top