நடிகர் திலகம் நடிப்பு பல்கலைக்கழகம் என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர் தான் நடிகர் சிவாஜி கணேசன். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் முக்கியமானவர். இவர் 1952 ஆம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் கருணாநிதி வசனத்தில் வெளியான பராசக்தி என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் முதன்முதலாக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளையும் பெற்றார். அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்த சிவாஜி கணேசன் பல வரலாற்று படங்களிலும் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கிளாசிக் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் பல வெற்றி திரைப்படங்களின் நடித்த சிவாஜி ஒரு கட்டத்திற்கு மேல் ரஜினி, கமல் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். தன் வாழ்நாளில் கடைசி வரை நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன் தயாரிப்பாளர் இயக்குனர் கலைப்புலி எஸ் தானு மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அவரை அன்புடன் இவர் புலி என்றுதான் அழைப்பார்.
இந்நிலையில் சிவாஜி அவரை ஒருநாள் தன் வீட்டில் மதிய உணவு சாப்பிட அழைத்துள்ளார். தாணு அங்கு சென்றபோது நான் பசியோடு இருக்கிறேன் ஏன் இப்படி லேட்டா வர சாப்பிடு என்று சிவாஜி கூறினார். அதன் பிறகு சாப்பிட்டு முடித்ததும், புலி என்ன இருந்தாலும் மனது சரி சாதாரணமில்லை. என்னுடைய பேத்தியை பார்க்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்படி கஷ்டத்துடன் நான் எதுக்கு வாழனும்? என் அண்ணன் எம்ஜிஆர் நல்ல பேரோடு போய் சேர்ந்து விட்டார்.
பேர் புகழ் செல்வம் என செல்வாக்கோடு போய்விட்டார். நான்தான் பஸ் மிஸ் பண்ணிட்டேன். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கியா நீ போயிட்டு வா என்று தானுவை அனுப்பி வைத்துள்ளார். இப்படி பேசிய சிவாஜி கணேசன் அடுத்த 15 நாட்களுக்கு பிறகு மரணம் அடைந்துள்ளார். இந்த தகவலை கலைப்புலி தாணு ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ள நிலையில் தற்போது அதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், முறையான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால், பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில்…
சாலை விபத்துகளில் சிக்குபவர்களைக் கட்சிப் பாகுபாடின்றி மீட்டு, அவர்களுக்குத் தகுந்த முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் முன்னாள்…
அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், பெங்களூருவில் வெறும் 31 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 2.5 மணி நேரம்…
சமூக அழுத்தங்களுக்காகவும், சடங்குகளுக்காகவும் மட்டுமே வாழும் இன்றைய சூழலில், ஒரு குழந்தை பிறப்பிற்குப் பின்னால் இருக்கும் பொறுப்பை உணர்ந்து நடிகை…
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசுக்கு நிர்வாகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளக் கால…