தமிழ் திரை உலகில் அன்னக்கிளி என்ற திரைப்படம் மூலம் கடந்த 1976 ஆம் ஆண்டு தன்னுடைய கலை பயணத்தை தொடங்கியவர் தான் இசையமைப்பாளர் இளையராஜா. சுமார் 48 ஆண்டுகளுக்கு மேலாக இசையின் அரசனாக தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் இந்திய இசை உலகில் ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றால் அது இளையராஜா மட்டும்தான். இவருடைய அசாத்திய இசையில் உருவான எண்ணற்ற பாடல்கள் பல்வேறு சிறப்புகளை பெற்றவை. ஒரு காலகட்டத்தில் இளையராஜாவின் இசைக்காக மட்டுமே ஓடிய திரைப்படங்கள் எத்தனையோ உள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த பல சூப்பர் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தவர் இளையராஜா. இப்படி இளையராஜா சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காசி. காசி என்ற கண் தெரியாத நாயகனாக விக்ரம் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
வினயன் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் பாடகர் ஹரிஹரன் தான் பாடியிருந்தார். ஒட்டு மொத்த பாடல்களுக்கும் இசையமைத்த இளையராஜா ஹரிஹரனை வைத்தே அனைத்து பாடல்களையும் எடுத்து மொத்த பணத்தையும் முடித்துக் கொடுத்தார். காசி படத்தில் இடம்பெற்ற ஆத்தோரத்திலே ஆலமரம், என் மன வானில், புண்ணியம் தேடி காசிக்கு போனா உள்ளிட்ட அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் தான்.
தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள 6 முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்', தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை…
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடந்த…
மத்திய அரசுடன் கொள்கை ரீதியாக மாறுபட்டாலும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு டெல்லியுடன் மோதல் போக்கைக்…