Connect with us

படம் சரியாக ஓடாத காரணத்தினால் சம்பளத்தை திருப்பி கொடுத்த இயக்குனர் விக்ரமன்.. உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர்..!!

CINEMA

படம் சரியாக ஓடாத காரணத்தினால் சம்பளத்தை திருப்பி கொடுத்த இயக்குனர் விக்ரமன்.. உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர்..!!

பிரபல இயக்குனரான விக்ரமன் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். கடந்த 1990-ஆம் ஆண்டு ரிலீசான புது வசந்தம் படம் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு கோகுலம், பூவே உனக்காக, சூரிய வம்சம், வானத்தைப்போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி, மரியாதை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

விக்ரமன் (Vikraman): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil

விக்ரமன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை காதல் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் பரத்தும் ஜெனிலியாவும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரித்தார். இவர் கலைப்புலி பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விக்ரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, விக்ரமன் நண்பர்களை மையமாக வைத்து உருவாகும் ஒரு கதை பற்றி கூறினார்.

   

Vikraman,இயக்குனர் விக்ரமன் பிறந்தநாள்: தற்போதும் மனதில் நிற்கும் அவரது எவர்கிரீன் படங்கள் - evergreen films of director vikraman birthday special - Samayam Tamil

 

அந்த கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அதே படமாக எடுக்கலாம் என கூறினேன். ஆனால் அவர் இப்போது இருக்கும் ஆடியன்ஸை கவரும் விதமாக ஒரு காதல் படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். இந்த படம் நன்றாக வரும். இதையே எடுக்கலாம் என கூறினார். ஆனால் நான் எனக்கு நண்பர்களை வைத்து கூறிய கதை தான் பிடித்திருக்கிறது. உங்கள் விருப்பத்திற்காக இந்த படத்தை எடுக்கிறேன் என கூறினேன்.

திரைத்துறையில் 50-ம் ஆண்டு... தலைவரான கலைப்புலி தாணு! | Kalaippuli S Thanu starts his 50th year in cinema industry - Vikatan

ஆனால் எதிர்பார்த்த அளவு படம் வெற்றி பெறவில்லை. படம் தோல்வியை சந்தித்தது. படம் ரிலீஸ் ஆன பிறகு விக்ரமனின் 16 லட்சம் ரூபாய் சம்பளத்திற்கான டிடி எடுத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்றேன். ஆனால் அவர் நீங்கள் சொன்ன கதையை எடுக்காமல் விட்டது என் தப்பு. ஆனால் எனது விருப்பத்திற்காக நீங்கள் இந்த கதையை படம் ஆக்கினீர்கள். ஆனால் படம் வெற்றி பெறவில்லை. எனக்கு சம்பளம் வேண்டாம் எனக் கூறி விட்டார். அந்த டிடியையும் எனது காரில் கொண்டு வந்து வைத்து விட்டார் என கலைப்புலி எஸ் தாணு கூறியுள்ளார்.

 

Chennai Kadhal (2006) - IMDb

author avatar
Priya Ram
Continue Reading
To Top