40 வயதில் திருமணம்.. எஸ்ஜே சூர்யா பட நடிகை இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

By Mahalakshmi on ஜூலை 8, 2024

Spread the love

40 வயதில் திருமணம் செய்து கொண்ட எஸ்ஜே சூர்யா பட நடிகையின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகைகள் பின்னர் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவார்கள். இல்லையென்றால் திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தைகள் என்று செட்டில் ஆகிவிடுவார்கள். அவர்களை நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்க்கும்போது அவரா இவர் என்ற அளவிற்கு ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போய் இருப்பார்கள்.

   

அப்படிப்பட்ட ஒரு நடிகையை தான் நாம் தற்போது பார்க்க இருக்கின்றோம். தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா. இவர் வாலி, குஷி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி மிகப்பெரிய இயக்குனராக வளம் வந்தார். அதை தொடர்ந்து நியூ என்ற திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருந்தார். இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது.

   

 

அதனை தொடர்ந்து எஸ்ஜே சூர்யா இயக்கிய திரைப்படம் தான் அன்பே ஆருயிரே திரைப்படம். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நிலா. தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் இந்த திரைப்படத்தில் மிக குறும்புத்தனமாக நடித்திருப்பார். அதிலும் அன்பே ஆருயிரே திரைப்படத்தில் வரும் மயிலிறகே மயிலிறகே என்ற பாடல் தற்போது வரை பல ரசிகர்களின் ஃபேவரட்டாக இருந்து வருகின்றது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த மருதமலை திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பாலிவுட்டுக்கு சென்று விட்டார். இவர் கடைசியாக தமிழில் நடித்த திரைப்படம் கில்லாடி. பாலிவுட்டில் செட்டிலான நடிகை நிலா தனது பெயரை மீரா சோப்ரா என்று மாற்றிக்கொண்டார். இவர் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் ஆவார்.

பாலிவுட் படங்களில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வந்த இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ரசீத் என்பவரை காதலித்து வந்தார். 40 வயதை தாண்டிய நடிகை மீரா சோப்ரா கடந்த ஆண்டுதான் தனது காதலரை கரம் பிடித்தார். இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு பிரம்மாண்டமான ரெஸாட்டில் இவர்களின் திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவ்வாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருவார். அந்த வகையில் இவரின் ரீசன்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரா இவர் என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.