தமிழ் திரையுலகின் சார்பில் முத்தமிழ் அறிஞர் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் “கலைஞர் 100” என்ற நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து திரை பிரபலங்களும் கலந்து கொண்டு பெரும் விமர்சையாக நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டி திரைத்துறையில் கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக அனைத்து திரைப்பட சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்கள் நடத்தும் “கலைஞர் 100” விழா கிண்டியில் உள்ள ரெஸ்ட் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து திரையுலக பிரபலங்களும், முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அவரது மகனான நடிகர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்று உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலைஞர் அவர்களை பற்றி பெருமையாக பேசியிருந்தார். அதில் அவர், கலைஞர் ஒரு சூரியன் மாதிரி என்று பெருமையாக பேச ஆரம்பித்தார். பிறகு கலைஞர் அரசியலுக்கு மட்டும் செல்லாமல் இருந்திருந்தால் எம்ஜிஆர், சிவாஜி என பல நடிகர்களை உருவாக்கி இருப்பார் என அவர் திரைத்துறையில் இருந்ததை மிக பெருமையாக கூறிருந்தார்.
மேலும் அவர், எப்போதும் ஒருத்தருக்கு பேச்சாற்றல் இருந்தால் எழுத்தாற்றல் இருக்காது; எழுத்தாற்றல் இருந்தால் பேச்சாற்றல் இருக்காது; ஆனால் கலைஞர் அவர்களுக்கு இரண்டுமே இருந்தது என்றும் மேடையில் குறிப்பிட்டுள்ளார். சில பேர் அவர்களுடைய கருத்தை தெரிவிக்கும் போது மற்றவங்களுக்கு புரியுதா புரியலையா என யோசிக்காமலேயே பேசுவார்கள் ஆனால் கலைஞர் சபையில் கவிஞருக்கு கவிஞராகவும், அறிஞருக்கு அறிஞராகவும், பாமரனுக்கு பாமரனாகவும் மாறி அவர் மொழியிலேயே பேசுவார்.
ரஜினிகாந்தின் இந்த கருத்தை சில பேர் கமலை தாக்கி தான் பேசி உள்ளார் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் அது கிடையாது, ரஜினிகாந்த் சாதாரணமாக தான் பேசி உள்ளார் என்று பல நெட்டிசன்களும் கூறியிருக்கின்றனர்.
டெல்லி பஞ்சாபி பாக் பகுதியில் அரசுப் பேருந்து உரசியதில், எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்ற 22 வயது டெலிவரி ஊழியர் பேருந்து…
பல்லியா மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் வளர்ச்சி முழக்கங்களுக்கும், அடித்தட்டு மக்களின் அன்றாட அவலங்களுக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுகிறது.…
கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில், பெட்ரோல் போடுவது போல நடித்து ஊழியரின் கவனத்தைத் திசைதிருப்பி செல்போனைத்…
பழிவாங்கும் உணர்ச்சி ஒருபோதும் நிலையான நீதியைத் தருவதில்லை; மாறாக, அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வன்முறையையும் கண்ணீரையும் மட்டுமே கடத்துகிறது. கடந்த…
சாலையோரக் கடையில் ஆசையுடன் பழத்தைத் திருடிச் சாப்பிட முயன்ற குட்டி யானையைத் தடுத்து நிறுத்தி, அந்தப் பழத்தை மீண்டும் கடையிலேயே…
வடமேற்கு டெல்லியின் பிதம்பூரா பகுதியில் துபாயில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவரின் வீட்டை குறிவைத்து மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்…