Categories: சினிமா

பட தயாரிப்பில் ஈடுபட்டு மொத்த பணத்தையும் இழந்த நடிகைகள்.. நினைத்துப்பாக்க முடியாத அளவுக்கு இழப்பை சந்தித்த சாவித்ரி..

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு கலைஞர் என்பவர் அந்தத் துறையில் மட்டும் நீடிக்காமல் பிற துறைகளிலும் களமிறங்குவது உண்டு குறிப்பாக நடிகர்கள் பலருமே தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கி பிற்காலத்தில் படங்களை படங்களை தயாரிக்க தொடங்கினர். இது எம் ஜி ஆர் தொடங்கி தற்பொழுது விஜய்சேதுபதி வரை நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதேபோல நடிகைகள் பலரும் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கி வெற்றி அடைந்தும் இருக்கின்றனர் தோல்வியடைந்தும் இருக்கின்றனர். அந்த வகையில் தயாரிப்பில் இறங்கி தோல்வி அடைந்த நடிகைகள் குறித்து தற்போது நாம் பார்க்கலாம்.

1. சாவித்திரி :

நடிகையர் திலகம் என அழைக்கப்படும் நடிகை சாவித்ரி 50, 60களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்தார். ஆனால் இவரின் கடைசி காலத்தில் கடனில் சிக்கி கஷ்டப்பட்டு உயிரிழந்தார். முதன்முதலில் கார் வாங்கிய ஹீரோயின், வீட்டில் நீச்சல் குளம் வைத்து கட்டிய நடிகை என்று திரையுலகை திரும்பி பார்க்க வைத்த சாவித்ரிக்கா இந்த நிலை என்று பலரும் வருத்தப்பட்டனர்.

#image_title

நடிகை சாவித்ரியின் இந்த நிலைக்கு காரணம் அவர் தயாரிப்பாளர் ஆனது தான் என்கிறார்கள். தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் செலவு செய்து பிரதாப்தம் என்ற பெயரில் படம் தயாரித்து இயக்கி வெளியிட்டார். இப்படம் படுதோல்வி அடைந்ததால் உடன் இறந்தவர்கள் சதி செய்து ஏமாற்றி சென்றனர் . இதனை அடுத்து விட்ட பணத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதற்காக தனது வீடு சொத்துக்களை விற்று மேலும் மேலும் படங்களை தயாரித்தவர் இறுதி காலகட்டத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்து கடனில் சிக்கினார்.

2. மனோரமா :

தமிழ் சினிமாவில் மனோராவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. காமெடி, குணச்சித்திரம் என எதுவாக இருந்தாலும் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர். ஆனால் தயாரிப்பாளராக என்ற ஆசையில் மொத்த சொத்தையும் இழந்துவிட்டார்.

#image_title

இவரது தத்து பிள்ளையான பூபதி, குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இவரின் ஆலோசனையின் பேரில் மனோரமா தூரத்து சொந்தம் என்ற படத்தை தயாரித்தார். ஆனால் இந்த படம் தோல்வியை சந்தித்ததால் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த மொத்த பணத்தையும் இழந்தார் மனோரமா.

3. ராதிகா :

வெள்ளித்திரையில் வெற்றி நடிகையாக வலம் வந்து சின்னத்திரையிலும் தனது மார்க்கெட்டை தட்டி தூக்கிய ஒரே நடிகை என்றால் அது ராதிகா தான். ராடன் மீடியா என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ள ராதிகா பல சீரியல்கள் படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரிக்கும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைத்தாலும் இவர் தயாரித்த படங்கள் தோல்வியை சந்தித்தன. மீண்டும் ஒரு காதல் கதை, ஜித்தன், மாரி போன்ற படங்களை அவர் தயாரித்துள்ளார். இதில் ஜித்தன் படம் படுதோல்வியை சந்தித்தது.

#image_title

4. ரம்பா :

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்பா. தொடையழகி என்று அழைக்கப்பட்ட ரம்பா அப்போது உச்சத்தில் இருந்த டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து உச்சத்தில் இருந்தார். ஆனால் தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசையால், 2003-ம் ஆண்டு சக்தி பரமேஸ் இயக்கத்தில் ரம்பா, ஜோதிகா, லைலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரி ரோசஸ் திரைப்படத்தை தயாரித்தார். அப்படம் தோல்வியை சந்தித்த நிலையில், பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் சினிமாவில் இருந்து ஒதுங்கினார் ரம்பா.

5.அமலா பால் :

நடிகை அமலாபால் தடயவியல் நிபுணராக நடித்த படம் கடாவர். இந்த படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் மாறினார். தான் நடித்து தயாரித்த கடாவர் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிட்டார். இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் இப்படம் லாபகரமான படமாக அமையவில்லை. மேலும் ஹீரோயின் வாய்ப்புகளும் குறையவே தயாரிப்பாளராக மாறி கடைசியில் பணத்தை இழந்தது தான் மிச்சம்.

#image_title

Archana

Recent Posts

உடம்பே புல்லரிக்குது..! ஒரு நொடி தப்பினால் மரணம்… மின்னல் வேகத்தில் வந்த ரயில்… குழந்தையை தெய்வமாய் வந்து மீட்ட பசு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…

4 minutes ago

“உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி!”… பிரதமர் மோடியையே உருகவைத்த சிறுமியின் மழலை மொழி… இணையத்தை ஆக்கிரமிக்கும் சிறுமி கிரிஜாவின் கியூட் வீடியோ..!!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…

7 minutes ago

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…

25 minutes ago

பதைபதைக்கும் வீடியோ..! மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு… உடலில் மிளகாய்ப் பொடி தூவி ரத்தம் சொட்டச் சொட்ட கொடூரம்.. பழைய பகையை தீர்க்க இப்படியொரு கொடூரமா??

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…

28 minutes ago

“அம்மா துடிதுடிக்க செத்ததை பார்த்தேன்” குழந்தையின் கண்முன்னே… தாயை கொன்று தூக்கிலிட்ட கொடூரம்… வரதட்சணைக்காக இப்படியா..? சிறுவனின் பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…

32 minutes ago