தமிழ்நாடு அரசின் 2021, 2022, 2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் எஸ்.ஜே சூர்யாவுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, சாய் பல்லவிக்கு 2021 ஆம் ஆண்டுக்கான விருது, இயக்குனர் லிங்குசாமிக்கு 2021 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே நடிகர் விக்ரம் பிரபுவுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, நடிகை ஜெயா குகநாதனுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து இசையமைப்பாளர் அனிருத்துக்கு 2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, பின்னணி பாடகி ஸ்வேதா மோகனுக்கு கலைமாமணி விருது, நடிகர் மணிகண்டனுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான விருது, பாடகர் ஏசுதாஸுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி விருது, சாண்டி மாஸ்டர் மற்றும் நிகில் முருகன் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விருதுகளை தமிழகம் முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் வழங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
