ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நேற்று ஒரு அரசு பேருந்து இயக்கப்பட்டது. அந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது கடைசி சீட்டில் அமர்ந்திருந்த வாலிபர் கையில் பீர் பாட்டிலுடன் பயணம் செய்துள்ளார். அவர் அவ்வபோது பீர் குடித்துக் கொண்டே பயணம் செய்ததாக தெரிகிறது.
இது குறித்து பயணிகள் நடத்துனாரிடம் கூறியுள்ளனர். உடனே நடத்துநரும், சக பயணிகளும் இது குறித்து வாலிபரிடம் கேட்டபோது அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பேருந்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நடத்துனரும், ஓட்டுனரும் பேருந்தை நடுவழியிலேயே நிறுத்தி அந்த வாலிபரை கீழே இறக்கி விட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
