மகளிர் உரிமைத்தொகை.. மாற்றம் செய்தது தமிழக அரசு…. வெளியான திடீர் அறிவிப்பு….!

By Nanthini on தை 2, 2026

Spread the love

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் விடுபட்ட பெண்களுக்கு மீண்டும் மகளிர் தொகை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பித்து வந்தனர். அவர்களில் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி 17 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மீண்டும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது.

இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்ட இணையதளத்தில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்னதாக தகுதி இல்லாத பெண்கள் இந்த திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெற்று வந்தால் புகார் அளிக்க <<exhttps://kmut.tn.gov.in/>>https://kmut.tn.gov.in<<>>  என்ற இணையதளத்தில் ஆக்சன் இருந்தது. தற்போது அதனை அரசு நீக்கியுள்ளது. அதனால் ஆன்லைனில் புகார் தெரிவிக்க முடியாது. அதே சமயம் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்ய ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.