தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் இணைய குடும்ப தலைவிகள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகிறார்கள். ஜூலை 15 முதல் தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அந்த விண்ணப்பங்கள் 45 நாட்களுக்குள் செயலாக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இதன் மூலம் செப்டம்பர் மாதத்தில் புதிய பயனர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நடந்த மாபெரும் அத்துமீறல்களும், அங்கிருந்த பெண்களின் கொடூரமான சித்திரவதைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து…
முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…
அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் நடத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ப், பலரும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்கும் சதித் திட்டம் குறித்த வழக்கு விசாரணையில், தற்பொழுது திடுக்கிடும்…
புதுச்சேரியில் ஓடும் அரசுப் பேருந்தில் திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய இளம்பெண்ணை, சமயோசிதமாகச் செயல்பட்டு அரசுப் பேருந்தையே ஆம்புலன்ஸாக…
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள்…