உங்களின் ரேஷன் கார்டை வைத்து, மகளிர் உரிமைத் தொகையின் புதிய விண்ணப்பங்கள் நிராகரிக்க வாய்ப்புள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டும் என்று 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் இன்னும் இருப்பதால், புதிதாக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை உயர வாய்ப்பு இருக்கிறது.
புதிய ரேஷன் கார்டு பெறுபவர்கள் அனைவரும், முதலில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கவே ரேஷன் கார்டை பெறுகின்றனர்.
ரேஷன் கார்டு இருந்தால், இத்திட்டத்திற்கு ஈசியாக விண்ணப்பித்து விடலாம் என்பதால், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் கூட அவசர அவசரமாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கின்றனர். இங்குதான் முக்கியமான விஷயம் உள்ளது. உரிமைத் தொகைக்கு வரும் விண்ணப்பங்களை, ரேஷன் கார்டு அடிப்படையாக வைத்து அரசு நிராகரிக்க வாய்ப்பு இருக்கிறது. சொந்த முகவரியில் வசிப்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் வாடகை ஒப்பந்தம் கொடுத்து ரேஷன் கார்டு வாங்கியவர்களுக்கு, பல சிக்கல் வர வாய்ப்புள்ளது. குடியிருந்த வீட்டில் வாடகை ஒப்பந்தம் வாங்கி ரேஷன் கார்டு அப்ளை செய்து விட்டு, பின் பல்வேறு காரணங்களால் வேறு ஊருக்கு இடம் பெயர்ந்து விட்டு, ரேஷன் கார்டில் முகவரியை மாற்றி இருக்க மாட்டார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு உரிமைத் தொகை வேண்டுமென்று விண்ணப்பித்திருந்தால், கள ஆய்வின்பொழுது, அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஒரே ரேஷன் கார்டு வைத்து மீண்டும் விண்ணப்பிக்கும் பெண்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். பொருளில்லாத ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் யாரேனும் உரிமை தொகைக்கு விண்ணப்பித்திருந்தால், அவர்களின் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
