தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 1000 ரூபாய் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலமாக மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பெறப்பட்டு கிராம நிர்வாக அலுவலர்களிடம் சரிபார்ப்பு பணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவற்றை விரைவில் சரிபார்த்து வழங்குமாறு வருவாய் துறை செயலர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 15-ஆம் தேதி உரிமை தொகை திட்டத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளது. அதற்குள் புதிய பயனாளிகள் பற்றிய அறிவிப்பை வெளியிட அரசு திட்டமிட்டு இருப்பதால் காலம் தாழ்த்தாமல் மொபைல் போன் வாயிலாக பயனாளிகளை தொடர்பு கொண்டு விபரங்களை சரிபார்த்து அனுப்புமாறு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
