மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் நடந்த துயர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தானேவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரின் உடல்நிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற நான்கு பேரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த குடும்பத் தலைவர் ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தையில் இருந்து கோழிக்கறி வாங்கி வந்து வீட்டுக்கு சமைத்து அரிசி, முட்டை, வடா பாவுடன் சேர்த்து சாப்பிட்டதாக தெரிகிறது.
சில மணி நேரங்களிலேயே குடும்பத்தினருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் முதல் கட்ட அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் உணவில் விஷம் கலந்திருந்தது மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. எப்படி உணவில் விஷம் கலந்தது என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
