VIDEOS
‘பறக்க பறக்க துடிக்குதே.. பழக பழக பிடிக்குதே.. ‘பாடலுக்கு நடனமாடிய காக்கே டக்கு ஜப்பானிய ஜோடி…… வைரலாகும் வீடியோ….
மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில், அனிருத் இசையமைத்து, தனுஷ் நடிப்பில் ‘திருச்சிற்றம்பலம்’ படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வசூலை கொடுத்து வருகிறது. இப்படத்தில் உள்ள ‘பறக்க பறக்க துடிக்குதே’ பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.
இப்பாடலுக்கு அனைவரும் ரீல்ஸ் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஜப்பானிய ஜோடிகளான காக்கே டக்கு தங்கள் இப்பாடலுக்கு மிக அழகாக நடனம் ஆடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இவர்கள் தமிழில் மட்டுமின்றி ஹிந்தி ,தெலுங்கு ,மலையாளம் என பல மொழிகளிலும் ரீல்ஸ் செய்து வருகின்றனர்.
இவர்கள் மட்டுமின்றி கொரியாவில் இருக்கிற ஒரு தாய் தனது மகளுடன் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.அவர்களுடைய இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் குரலில் அனிருத் இசையமைக்கும் அனைத்து பாடல்களும் ஹிட்டு தான். அந்த வகையில் தற்பொழுது ‘மேகம் கறுக்காத பறக்க பறக்க துடிக்குதே’ சாங் செம ஹிட் ஆகி வைரலாகிறது.இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு …..