கைதி படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த குட்டி பாப்பா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. வியக்க வைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்..!

By Nanthini on சித்திரை 30, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் பேபி மோனிகா. இவர் தமிழ் மற்றும் மலையாள என பல மொழி திரைப்படங்களில் இன்றும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தில் நடித்த பிறகு இவருக்கென்று சினிமாவில் தனி ஒரு புகழ் கிடைத்தது.

photos : 'கைதி' படத்தில் வரும் குட்டி பொண்ணா இது?.. இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்களேன்!.. புகைப்படங்கள் இதோ..

   

தி ஃப்ரிஸ்ட் படத்தில் நடிகர் மம்முட்டியின் அமேயாவாக பேபி மோனிகா நடித்திருந்தார். ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தால் திரைப்படத்தில் சிறுவயது ஏஞ்சல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைப் போலவே ஐஸ்வர்யா நடித்த கனா திரைப்படத்தில் ஐஸ்வர்யாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் இவர்தான் நடித்திருந்தார்.

   

கைதி படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது? ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிய  கார்த்தியின் ரீல் மகள்!

 

இந்தத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தனி ஒரு புகழ் கிடைத்தது. பிறகு சமுத்திரக்கனி மற்றும் ரம்யா பாண்டியன் நடித்த ஆண் தேவதை திரைப்படத்தில் மகளாக நடித்திருந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பெற்றோமாஸ் படத்தில் பேய் குழந்தையாக நடித்திருந்தார். இந்த படத்தில் தமன்னா பேயாக நடித்திருந்தார். நிவேதா என்ற கதாபாத்திரத்தில் தான் பேபி மோனிகா நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷின் அக்கா குழந்தையாக இவர் நடித்திருந்தார். அஞ்சலி மற்றும் ஜெய் நடித்த பலூன் திரைப்படத்தில் தத்து எடுக்கப்பட்ட குழந்தையாக இவர்தான் நடித்திருந்தார். இதனைத் தவிர்த்து சங்கு சக்கரம் திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படங்களை தாண்டி அருள்நிதி நடித்த திருவின் குரல் திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் ராட்சசன் திரைப்படத்தில் கயல் கதாபாத்திரத்தில் நடித்த இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றது.

இதையெல்லாம் தாண்டி கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தில் அவருடைய பெண்ணாக நடித்திருந்த நிலையில் இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் கிடைத்தது. படத்தின் வெற்றியை தொடர்ந்து பேபி மோனிகா புகழ் பெற ஆரம்பித்தார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் அடுத்த பாகத்திலும் இவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் ஆர்யா நடிப்பில் வெளியான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்திலும் நடித்திருந்தார். பேபி மோனிகா குழந்தை நட்சத்திரமாக பத்து வருடங்களுக்கு மேலாக சினிமாவில் அசத்திக் கொண்டிருக்கிறார். குழந்தை முகத்தில் இருந்து வளர்ந்து வரும் பெண்ணாக மாறிவரும் பேபி மோனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வர அதனை பார்த்த ரசிகர்கள் கைதி பட குட்டி பாப்பாவா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.