FLASH NEWS: தமிழகத்தில் உதயமாகும் புதிய கட்சி… காடுவெட்டி குரு மகள் சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…!

By Nanthini on தை 6, 2026

Spread the love

மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி ஜெ. குரு மகள் குரு.விருதாம்பிகை வருகின்ற ஜனவரி 9 ஆம் தேதி சேலத்தில் புதிய கட்சியை தொடங்குகின்றார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எங்கள் கட்சி பெயர் ஜெ. குரு பாட்டாளி மக்கள் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி சேலத்தில் பேரணியுடன் கட்சியை தொடக்க விழா நடைபெறும். வன்னியர் சமூக மக்களுக்கு யாரும் எதுவும் செய்யவில்லை. எங்களுடைய கொள்கை சமூக நீதிக் கொள்கை.

பாட்டாளி மக்கள் கட்சியில் ஒற்றுமை கிடையாது. அவர்கள் கொள்கையை விட்டு குடும்பத்தை கட்சியில் கொண்டு வந்தார் ராமதாஸ். கொள்கையிலிருந்து தளர்ந்து அன்புமணி ராமதாசுக்காக தன்னுடைய நிலையிலிருந்து மாறியுள்ளார். எங்களுக்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸு துரோகம் செய்துவிட்டார்கள். தற்போது தான் கட்சி தொடங்கியுள்ளதால் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. யாரை ஆதரிக்க போகிறோம் என்பதை முடிவு செய்யவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது புதிய கட்சி தொடங்க உள்ளது அரசியலில் பரபரப்பு கிளப்பியுள்ளது.