தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் இளைஞர்களின் பேவரைட் ஹீரோயினியாக வலம் வந்தவர் தான் நடிகை சோனாலி. மணிரத்தினம் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான பம்பாய் படத்தில் ஹம்மா ஹம்மா என்ற பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். ஹிந்தி நடிகையான இவர் இந்தியில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் பிரபலமானது குணால் நடித்த காதலர் தினம் திரைப்படம் மூலமாக தான். இந்த திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் வென்றார். பிறகு அர்ஜுன் நடித்த கண்ணோடு காண்பதெல்லாம் என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனக்கு புற்றுநோய் இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேடி வந்தார். கீமோ சிகிச்சைக்காக மொட்டை அடித்துக் கொண்டார்.
அந்த சமயத்தில் கண்ணீர் விட்டபடி அவர் உருக்கமாக பேசியும் ஒரு வீடியோவை வெளியிட்டார். பின்னர் சிகிச்சைக்கு பிறகு விக் வைத்துக்கொண்ட புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
பிறகு புற்றுநோயிலிருந்து மெல்ல மெல்ல மீண்டும் வந்தார். சமீபகாலமாக அடிக்கடி இவர் பல நிகழ்ச்சிகளில் தென்படுகின்றார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக ஆக்டிவாக இருந்து வரும் சோனாலி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அதன்படி தற்போது அவரின் ;லேட்டஸ்ட் வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த நடிகர்கள் காதலர் தின பட நடிகையா இது ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே என கேட்டு வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க