Categories: சினிமா

‘காதல்’ படத்தால் என் வாழ்க்கையில் நான் இதையெல்லாம் இழந்துவிட்டேன்… நடிகை சந்தியா பகிர்ந்த தகவல்!

Spread the love

காதல் திரைப்படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சந்தியாவை இன்றுவரை யாராலும் மறந்திருக்க முடியாது. இன்றும் காதல் படம் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது சந்தியா தான். அந்த அளவிற்கு அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. சந்தியாவின் உண்மையான பெயர் ரேவதி. இவர் சினிமாவிற்காக சந்தியா என்ற தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

கேரள மாநிலம் கொச்சியை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். இவருக்கு ராகுல் என்ற ஒரு அண்ணனும் உள்ளார். காதல் படத்தின் வெற்றி இவரை முன்னணி நடிகையாக்க, அடுத்தடுத்து பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஒரு கட்டத்தில் தனக்கான மார்க்கெட்டை இழக்க திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

இந்நிலையில் காதல் படத்துக்கு தான் ஹீரோயினாக தேர்வானது எப்படி என்பது குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “காதல் பட ஷூட்டிங்கின் போது நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். அந்த கதைக்கும் ஒரு பள்ளி மாணவி தோற்றம்தான் தேவை என்பதால் என்னைத் தேர்வு செய்தார்கள். அதனால் பள்ளியில் ஒரு 20 நாட்கள் லீவ் எடுத்துக் கொண்டு நடிக்கலாம் என முடிவு செய்தோம்.

ஆனால் அது எப்படி எல்லாமோ சென்று கடைசில் ஸ்கூலில் இருந்து ட்ராப் அவுட் ஆகிவிட்டேன்” எனக் கூறியுள்ளார். காதல் படம் வெற்றி பெற்றதால் அவரின் சினிமா கேரியர் நல்ல படியாக அமைந்தது. ஒருவேளை தோல்வி அடைந்திருந்தாலும் படிப்பும் போய் சினிமாவில் எதிர்காலமும் இல்லை என்ற நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கும். எல்லோருக்கும் பள்ளிக்காலம் என்பது படிப்பை தாண்டி மிக மகிழ்ச்சியான காலகட்டம். சினிமாவுக்காக அதை அவர் இழந்திருப்பது அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அவரின் இந்த வீடியோ நேர்காணல் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

vinoth

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

2 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

3 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

3 மணத்தியாலங்கள் ago