காதல் படம் ரிலீஸானபோது நான் ஜெயிலில் இருந்தேன்… இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் பகிர்ந்த தகவல்!

By vinoth on தை 2, 2025

Spread the love

தென்னிந்திய திரை உலகில் காதல் படத்தின் மூலமாக தாக்கத்தை ஏற்படுத்தியவர் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மணிஷர்மா உள்ளிட்டவர்களிடம் உதவியாளராக பணியாற்றிய ஜோஷ்வா ஸ்ரீதர் 2004 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படம் மூலமாக தான் இவர் முதன்முதலாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஹிட்டாகின.

   

அதன் பின்னர் அவர் கவனிக்கப்படும் இசையமைப்பாளர் ஆகி தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிப் படங்களுக்கு இசையமைத்தார். ஆனாலும் அவர் திடீரென்று காணாமல் போனார் . அவரின் அனுகுமுறையால்தான் அவர் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

   

இது குறித்து இயக்குனர் விக்ரமனும் ஒரு நேர்காணலில் “அவர் திறமையான இயக்குனர் ஆனால் அவரின் அனுகுமுறை சரியில்லை” எனக் கூறியுள்ளார். இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு இப்போது ஜோஷ்வா ஸ்ரீதர் ஊடகத்தில் பேட்டிக் கொடுத்துள்ளார்.

 

அதில் “காதல் படம் ரிலீஸாகி ஊரெல்லாம் பாடல்கள் ஹிட். ஆனால் நான் அப்போது சென்னை புழல் சிறையில் இருந்தேன். என்னை ஒரு கேஸில் பிடித்து உள்ளே போட்டுவிட்டார்கள். எனக்கு அப்போது திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்தனர். ஆனால் நான் என் மனைவியை பிரிவதாக இருந்தேன்.

அப்போது இன்னொரு பெண்ணைக் காதலித்தேன். அந்த பெண் வீட்டார் என்னை போலீஸில் புகார் கொடுத்து ஜெயிலில் தள்ளிவிட்டார்கள். அதனால் நான் கொஞ்ச காலம் தலைமறைவாகவும் இருக்க வேண்டி இருந்தது. அதற்குள் நான் பலரிடம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு தலைமறைவாகிவிட்டதாக பரப்பி விட்டார்கள். அதனால் என்னால் முழுமையாக சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் போனது.” எனக் கூறியுள்ளார்.