“அதிமுக – விஜய் கூட்டணி உண்மையா?”…. கடம்பூர் ராஜுவின் ஒற்றை வார்த்தையில் அதிரும் அரசியல் களம்….!

Spread the love

தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கூட்டணிக் கணக்குகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சூசகமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே அதிமுகவின் பிரதான இலக்கு என்றும், அதற்காக ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றிணைவது சரியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவை தனது அரசியல் எதிரி என்று விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய கடம்பூர் ராஜூ, விஜய் கட்சி தொடங்கியது முதல் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டையே உறுதியாக எடுத்து வருவதாகக் கூறினார். அதிமுகவின் கொள்கையும் திமுகவை வீழ்த்துவதுதான் என்பதால், இந்த இலக்கை அடைய அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தங்களின் விருப்பம் என்று அவர் தெரிவித்தார். இருப்பினும், கூட்டணியில் இணைவது குறித்த இறுதி முடிவை அந்தந்தக் கட்சிகளே எடுக்க வேண்டும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை அதிமுகவே தலைமை தாங்கும் என்றும், எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தெளிவாக இருப்பதாகவும் அவர் கூறினார். மற்ற கட்சிகளுடன் ஒப்பிடுகையில் அதிமுக – பாஜக கூட்டணி மிகவும் பலமாக இருப்பதாகவும், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் எவ்விதக் குழப்பமும் இன்றி சுமூகமான சூழல் நிலவுவதாகவும் கடம்பூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்தார்.

மறுபுறம், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாக விமர்சித்த அவர், மார்ச் 17-ல் சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜராவதை அரசியலோடு தொடர்புபடுத்தத் தேவையில்லை என்றும் அது ஒரு சாதாரண நடைமுறை என்றும் கூறினார். விஜய்யின் அரசியல் வருகை தமிழக தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடம்பூர் ராஜூவின் இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன.

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

6 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

6 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

6 மணத்தியாலங்கள் ago