தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுகவின் தேர்தல் வியூகங்கள் மற்றும் வாக்குறுதிகள் குறித்து ஆக்ரோஷமாகப் பேசினார். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவது உறுதி என்றும், இந்தத் தேர்தல் ஒரு சம்பிரதாயச் சடங்கு மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த கடம்பூர் ராஜூ, முதல்வர் ஸ்டாலின் பேசும் கருத்துக்கள் மக்களுக்குப் புரிவதில்லை என்று சாடினார். குறிப்பாக, பூஜ்ஜியம் குறித்த முதல்வரின் பேச்சை எள்ளிநகையாடிய அவர், அதிமுக வரும் தேர்தலில் ‘இரட்டை இலை’ சின்னத்தின் பலத்துடன் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று சவால் விடுத்தார். திமுக ஒருமுறை ஆட்சியில் இருந்தாலே மக்களிடம் வெறுப்பைச் சம்பாதித்துவிடும் என்றும், கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மக்களின் தற்போதைய பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, அதிமுக ஆட்சியைப் பிடித்தவுடன் வழங்கப்படவுள்ள அதிரடித் திட்டம் குறித்து அவர் மேடையில் அறிவித்தார். தேர்தல் முடிந்த பிறகு பொதுமக்களின் வங்கிச் கணக்கில் நேரடியாகப் பணம் வரவு வைக்கப்படும் என அவர் உறுதியளித்தார். “தேர்தலில் இரட்டை இலை சின்னத்தைப் பார்த்து ‘டப்பு டப்புனு’ பட்டனை அமுக்குங்க, தேர்தல் முடிந்த பிறகு ‘பட்டு பட்டுனு’ உங்கள் வீட்டில் 10,000 ரூபாய் வந்து விழும்” என்று கிராமப்புற பாணியில் அவர் பேசியது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
ஏற்கனவே பொங்கல் பரிசுத் தொகையாக அதிமுக அரசு 2,500 ரூபாய் வழங்கியதை நினைவுகூர்ந்த அவர், எடப்பாடியார் சொன்னதைச் செய்வார் என்பதற்கு இதுவே சாட்சி என்றார். 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்துவோம் என்று கூறி திமுக மக்களை ஏமாற்றி வருவதாகவும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் தனது உரையில் அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார். கடம்பூர் ராஜூவின் இந்த 10,000 ரூபாய் வாக்குறுதி தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…