வெளிய வரதுக்கே தைரியம் இல்ல, CM சார் என குரல் கொடுத்தால் ஆட்சி மாறிடுமா?… இந்த கருப்பு சட்டைக்காரன் இருக்க வரைக்கும் அது நடக்காது… விஜய்யை எச்சரித்த கி.வீரமணி…!

By Nanthini on ஐப்பசி 5, 2025

Spread the love

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. அந்த விழாவிற்கு திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கியதோடு முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். அப்போது விழா மேடையில் தலைமை தாங்கி பேசிய வீரமணி, சுயமரியாதை கொள்கையோடு கடமை, கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு என அண்ணா தந்த கோட்பாடு கலைஞர் வழி நின்று மக்களுக்காக ஓய்வின்றி உழைத்து வரக்கூடிய மின்சாரமாக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். அந்த மின்சாரத்தை தற்போது புதிதாக வரக்கூடிய மின்மினி பூச்சிகளால் ஒன்றுமே செய்ய முடியாது.

அந்தப் பூச்சிகளை நம்பிக்கொண்டு எந்த சந்தர்ப்பமாவது கிடைக்காதா என்று வடக்கே இருந்து வந்தவர்கள் ஆழம் பார்க்க நினைக்கின்றன என மத்திய அரசை விமர்சித்துள்ளார். மேலும் நீங்கள் ஆலம் பார்க்க நினைத்தால் பெரியார் மண் உங்களை மூடிவிடும். சிஎம் சார் என குரல் கொடுத்தால் ஆட்சியை மாறிவிடுமா என்று தமிழக வெற்றிக்கழகம் விஜயையும் விமர்சித்துள்ளார். விஜய்க்கு வெளியே வர தைரியம் இல்லை, உங்களுடைய நடவடிக்கை பற்றி நீதிமன்றம் தோலை உரித்து உள்ளது, திமுக ஆட்சிக்கு நீங்கள் சவால் விடுகிறீர்களா?, கருப்பு சட்டை காரனின் ஒரு சொட்டு ரத்தம் இருக்கும் வரையில் உங்கள் கதை நடக்காது என்று வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.