காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியின் மனைவி வத்சலா காலமானார். உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 5 மணி அளவில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இவருடைய மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.