ஆட்சியில் பங்கு… இபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த கூட்டணி கட்சி… திமுகவை தொடர்ந்து அதிமுக கூட்டணியிலும் விரிசல்…!

By Nanthini on தை 11, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை என தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் கூட்டணியில் இருக்கக்கூடிய ஒரு சில கட்சிகள் ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதி என குரல் எழுப்பி வருவதால் ஸ்டாலின் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.

இப்படியான நிலையில் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை வைத்து திமுகவுக்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுப்பது போல அதிமுகவுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சமீபத்தில் இணைந்துள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் யுவராஜா, அதிமுக ஆட்சி அமைத்தாலும் அது கூட்டணி ஆட்சி தான் என்றும் 2026 இல் NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று இபிஎஸ் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்றும் தெரிவித்துள்ளார்