பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை செய்து கொண்டாரா..? அடையாறு ஆற்றிலிருந்து எடுக்கப்பட்ட உடல்.. திரையுலகை உலுக்கிய அதிர்ச்சிப் செய்தி…!

By Swetha on வைகாசி 18, 2026

Spread the love

தமிழ் திரைப்படத்துறையில் மூத்த தயாரிப்பாளரும், இயக்குனரும், நடிகருமான கே. ராஜன் அவர்கள் சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகி இருக்கும் செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் இந்த துரதிர்ஷ்டவசமான முடிவை எடுத்திருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு, அடையாறு ஆற்றில் இருந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த அதிர்ச்சி மரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்களும், ரசிகர்களும் கே. ராஜன் அவர்களின் மறைவிற்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.

   

கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான ‘பிரம்மச்சாரிகள்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் கால் பதித்த கே. ராஜன், அதன் பிறகு பல திரைப்படங்களை தயாரித்தும், சில படங்களை இயக்கியும் உள்ளார். மேலும், ‘தங்கமான தங்கச்சி’ உள்ளிட்ட சில படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றியதுடன், திரையிலும் தோன்றி நடித்துள்ளார். சினிமா தொடர்பான பொது மேடைகளில் எதற்கும் அஞ்சாமல், திரையுலகினரின் நலனுக்காக எப்போதும் வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் குரல் கொடுத்து வந்த ஒரு மூத்த கலைஞர் இப்படி ஒரு முடிவை தேடிக் கொண்டது தமிழ் சினிமா உலகிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.