தனியார் பள்ளியில் ஒரு ரூபாய் கூட கட்டாமல் படிக்க முடியுமா?… கூகுளில் கூட தேடினாலும் கிடைக்காத தகவல்… RTE அட்மிஷனில் இருக்கும் அந்த ‘ட்விஸ்ட்’ இதுதான்..!!!

By Rajeshwari on சித்திரை 13, 2026

Spread the love

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான இலவச மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் 25 சதவீத இடங்கள் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 2026 ஏப்ரல் 20 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.கே.ஜி வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2022 முதல் 31.07.2023 வரையிலும், ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் 01.08.2019 முதல் 31.07.2020 வரையிலும் பிறந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

   

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப் பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் வசிக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் உள்ள பள்ளிகளில் மட்டுமே சேரத் தகுதியுடையவர்கள். இதற்கான விண்ணப்பங்களை rte.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாகப் பதிவேற்றலாம்.

   

மேலும் விண்ணப்பங்கள் அதிகளவில் பெறப்படும் பட்சத்தில், மே 22 ஆம் தேதி குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப் பட்டியல் மே 29 ஆம் தேதி வெளியிடப்படும். ஆதரவற்ற குழந்தைகள், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள், திருநங்கைகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.