“அவர் அதற்கு சரிப்பட்டு வர மாட்டார்”… திருமணமான 10 நாளில் காதலனுக்காக கணவனை தீர்த்து கட்டிய புது பெண்… அதிர்ச்சி பின்னணி…!!!

By Muthu Mani on சித்திரை 29, 2026

Spread the love

திருமணமான பத்தே நாட்களில், தனது காதலனுடன் ஹோட்டலுக்குச் சென்ற பெண் ஒருவர், 11-வது நாள் தனது கணவரைக் கூலிப்படை ஏவிக் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. திலீப் யாதவ் என்ற அந்த நபர், திருமணமான சில நாட்களிலேயே மர்மமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில், போலீசாரின் விசாரணையில் அவரது மனைவியே இந்தக் கொலையைத் திட்டமிட்டது தெரியவந்தது.

போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த அந்தப் பெண், தனது கணவரால் தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி அளிக்க முடியவில்லை என்றும், தனது காதலன் மட்டுமே உடல் ரீதியாக வலிமையானவர் என்பதால் அவருடன் வாழ விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். கணவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த அவர், திருமணத்தின் போது ‘முகத்தைக் காட்டுவதற்காக’ (Mu-dikhayi) உறவினர்கள் பரிசாக வழங்கிய பணம் மற்றும் நகைகளை விற்று கூலிப்படைக்கு முன்பணம் கொடுத்துள்ளார்.

   

திட்டமிட்டபடி, அந்தப் பெண் ஏற்பாடு செய்த கூலிப்படையினர் திலீப் யாதவை வழிமறித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அவர் மயக்கமடைந்த நிலையில், துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். தற்போது அந்தப் பெண்ணையும், கொலையில் சம்பந்தப்பட்ட கூலிப்படையினரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.