“இதுதான் தாயுள்ளம்” பசியால் துடித்த 4 மாதக் குழந்தை.. வீதியில் உட்கார்ந்து தாய்ப்பால் ஊட்டி பசிபோக்கிய பெண் காவலர்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

By Soundarya on சித்திரை 29, 2026

Spread the love

மெக்சிகோவில் வீதி ஒன்றில் 4 மாதக் குழந்தை ஒன்று பசியின் கொடுமையால் இடைவிடாது அழுதுகொண்டிருந்தது. குழந்தையின் தாய் எவ்வளவு முயன்றும் அவனது பசியைத் தீர்க்க முடியாமல் தவித்ததைக் கண்ட அப்பகுதி பெண் காவலர் ஒருவர், உடனடியாக முன்வந்து குழந்தையை வாங்கி மடியில் கிடத்தித் தாய்ப்பால் ஊட்டினார்.

தன்னலம் கருதாத அந்தப் பெண் காவலரின் இந்த மனிதநேயமிக்க செயல், அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பசியால் வாடிய குழந்தைக்கு ஒரு காவலராக மட்டுமல்லாமல், ஒரு தாயாக நின்று அவர் உதவிய அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிப் பாராட்டுகளைக் குவித்து வருகின்றன.

   

   

நெருக்கடியான நேரத்திலும் தனது கடமையைத் தாண்டி மனிதாபிமானத்துடன் செயல்பட்ட அந்தப் பெண் காவலருக்குப் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.