Categories: இந்தியா

“கடைசி ஃபோன் கால்”… பாத்ரூமில் துடி துடித்த நீதிபதி மனைவி… கதவைத் திறந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி… ரயில் பயணத்தில் நடந்த துயரம்…!

Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தில் ரயிலில் பயணம் செய்த மாவட்ட நீதிபதியின் மனைவி, கழிவறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்தோர்கார் மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதியான ராஜ்குமார் சௌகான் மற்றும் அவரது மனைவி உஷா சௌகான் ஆகியோர், ஹோலி பண்டிகை முடிந்து ஜோத்பூரிலிருந்து நிம்பஹெராவுக்கு காஞ்சிகுடா-பகத் கி கோதி எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தனர். இருவரும் ஒரே ரயிலில் இருந்தாலும், இடப்பற்றாக்குறையால் தனித்தனி பெட்டிகளில் பயணம் செய்துள்ளனர்.

ரயில் நிம்பஹெரா நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, உஷா தனது கணவரைத் தொலைபேசியில் அழைத்து, தான் கழிவறைக்குச் சென்றுவிட்டு ஸ்டேஷன் வந்ததும் இறங்கிவிடுவதாகக் கூறியுள்ளார். ரயில் நிலையத்தை அடைந்ததும் நீதிபதி ராஜ்குமார் இறங்கி தனது மனைவிக்காக நீண்ட நேரம் காத்திருந்துள்ளார். ஆனால் உஷா வராததாலும், அவரது செல்போன் அழைப்பை ஏற்காததாலும் பதற்றமடைந்த நீதிபதி, உடனடியாக ரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளைச் சோதித்ததில் உஷா அந்த நிலையத்தில் இறங்கவில்லை என்பது உறுதியானது.

இதனையடுத்து அடுத்தடுத்த ரயில் நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில் ஜோரா நிலையத்திற்கு வந்தபோது, உஷாவின் பெட்டிக்குச் சென்று பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது இருக்கையில் உடமைகள் மட்டுமே இருந்தன. பூட்டப்பட்டிருந்த கழிவறை கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, உஷா மயக்க நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

தன் கண்முன்னே பயணம் செய்த மனைவி திடீரென உயிரிழந்ததைக் கேட்டு நீதிபதி ராஜ்குமார் நிலைகுலைந்து போனார். மாரடைப்பு காரணமாகவே இந்த உயிரிழப்பு நேரிட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க, பிரேதப் பரிசோதனை இன்றி சட்ட நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டு உஷாவின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் சக பயணிகள் மற்றும் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

10 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

10 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

10 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

10 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

10 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

11 மணத்தியாலங்கள் ago