வாயடைத்துப்போன நீதிபதி!… பாலியல் வக்கிரத்தின் உச்சம்… “சீக்கி” குதிரைக்கு நேர்ந்த கொடூரம்… 19 வயது இளைஞருக்கு காத்திருக்கும் அதிரடி தண்டனை…!!

By Gayathri on ஐப்பசி 3, 2026

Spread the love

இங்கிலாந்தில் உள்ள குதிரைப் பண்ணை ஒன்றில் அத்துமீறி நுழைந்து, ‘சீக்கி’ எனப்படும் குதிரையுடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், 19 வயதான மிகேல்சன் என்ற இளைஞர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், பாலியல் குற்றத்தை அரங்கேற்றும் நோக்கத்தில்தான் பண்ணைக்குள் நுழைந்தேன் என்ற அத்துமீறல் குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். விலங்குகளுக்கு எதிரான இத்தகைய செயல்கள் அங்குள்ள சட்டப்படி கடுமையான குற்றமாகப் பார்க்கப்படுவதால், இந்தச் சம்பவம் சமூக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளதால் அவருக்குக் கட்டாயம் சிறைத் தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எச்சரித்துள்ளார். தற்போதைக்கு அந்த இளைஞருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை நவம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவம்பரில் நடைபெறும் அந்த விசாரணையின் முடிவில்தான், இந்த வழக்கில் அவருக்கு என்ன மாதிரியான தண்டனை வழங்கப்படும் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.