நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாகி ஏமாற்றி விட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸ்டில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், சென்னையில் கோவிலில் வைத்து தன்னை ரங்கராஜ் திருமணம் செய்து கொண்டு தற்போது சேர்ந்து வாழ மறுக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாகி விட்டு தன்னுடன் சேர்ந்து வாழாமல் ஏமாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே சுருதி என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து வாழ்ந்து வரும் நிலையில் அவர் வேறொரு பெண்ணுடன் உறவில் இருப்பதாக தகவல்கள் கசிந்தது. யாரும் எதிர்பாராத விதமாக ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டதாக இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை ஜாய் அண்மையில் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து அடுத்த சில நாட்களில் தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்து குழந்தைக்கு ராஹா ரங்கராஜ் என பெயர் சூட்டியிருப்பதாகவும் புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தார்.
ரங்கராஜுடன் பல்வேறு நேரங்களில் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் அவர் பதிவிட்டார். இது தொடர்பாக எதுவும் பேசாமல் இருந்த ரங்கராஜ் தனது முதல் மனைவியுடன் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியானது. இப்படியான நிலையில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல்துறையில் ஜாய் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதேசமயம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜாய், தன் குழந்தைக்கு அவர்தான் அப்பா, அவரை பலமுறை சந்திக்க முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை, எனக்கு கணவர் அவர்தான் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பரபரப்பு பேட்டி அளித்திருந்தார். இந்த பிரச்சனை ஓய்வதற்குள் அடுத்த வீடியோவை ஜாய் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மாதம்பட்டி ரங்கராஜ் பொண்டாட்டி என்று கூறி ரொமான்டிக்காக பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
Husband (aka) #RahaRangaraj Appa-வின் Alaparaigal 🙈 @MadhampattyRR #madhampattyrangaraj #chefmadhampatty #chefmadhampattyrangaraj
A man that can betray the woman who carried his child will betray anyone
Read that again…. pic.twitter.com/0mItPCB9Uc— Joy Crizildaa (@joy_stylist) August 31, 2025
