எனக்கும், குழந்தைக்கும் மாதம் “ரூ.6,50,000 பராமரிப்பு தொகை” வேண்டும்… மாதம்பட்டி ரங்கராஜுக்கு செக் வைத்த ஜாய் கிரிசில்டா..!!.

By Soundarya on ஐப்பசி 30, 2025

Spread the love

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவருடைய இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸிலடா பற்றிய விவகாரம் தான் ஒன்றரை மாதமாக டிரெண்டாகி வருகிறது. தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக   ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான புகார்களை அளித்ததோடு, அவரோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், விடியோக்கள் வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக தற்போது மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் பிரபலங்களின் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா. தனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் குழந்தைக்கும், தனக்கும் மருத்துவ செலவு, வீட்டு வாடகை, இதர செலவுகளுக்காக மாதம் 6,50,000 பராமரிப்பு தொகையாக வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிடக்கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.