மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார் ஜாய் கிரிஸில்டா. மேலும் அவரோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே சுருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக கூறி ஜாய் கிரிஸில்டா கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். தற்போது அவர் சமூக வலைதள பக்கத்தில் பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி என்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாகியது குறித்து காவல் ஆணையரிடம் புகார் அளித்து பத்து நாட்கள் ஆகிறது.
இப்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். நான் என் பார்வையற்ற தாயுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்றேன். என்னுடைய புகாரின் நிலை என்ன ஆனது என்று எங்களுக்கு தெரியவில்லை. இதற்கு இடையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு விஐபி அந்தஸ்து கொடுக்கப்படுகிறது. அப்பா நீங்கள் இதில் தலையிட்டு நீதி வழங்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் ஆட்சியை என்னை போன்ற பெண்கள் நம்புகிறார்கள். எந்த ஒரு விஐபி பிரபலமும் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றத்தை செய்து நடவடிக்கை எடுக்காமல் சுற்றி தெரிய முடியுமா என் வயிற்றில் உள்ள குழந்தைக்கு எனக்கு நீதி வேண்டும் என்று கூறியுள்ளார்
