விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் இந்த வாரம் நாமினேஷனில் சரவணன் விக்ரம், விசித்ரா, பூர்ணிமா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ், மணி, ஜோவிகா ஆகியோர் சிக்கி இருந்த நிலையில் சரவண விக்ரம் இந்த வாரம் எலிமினேட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த பிக் பாஸ் ஜோவிகாவை எலிமினேட் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.
வெளியேறும் முன்பே ஜோவிகா எல்லோரிடமும் பேசும்போது தனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இது தெரியும், எனக்கு ஒரு கனவு வந்தது, அதில் கமல் சாறுடன் நின்று என் பயண வீடியோ பார்த்துக் கொண்டிருந்தேன். அதுதான் தற்போது நடந்துள்ளது. உங்களிடம் எந்த சண்டையும் இல்லாமல் தற்போது நல்ல நட்புடன் வெளியேறுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி எனக் கூறிவிட்டு வெளியே சென்றார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தன் அம்மாவுடன் யூடியூப்பில் லைவில் பேசிய ஜோவிகா, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தான். இப்போது நான் நல்ல மனநிலையில் உள்ளேன். வெளியே வந்ததும் என் அம்மாவிற்கு முகத்தில் அடிபட்ட செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். இதற்கு பதில் சொல்ல வேண்டிய நாள் விரைவில் வரும். சிலருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஆனால் சிலரிடம் எச்சரிக்கைகள் விடுக்க விரும்புகிறேன். சிலருக்கு நான் பதிலும் கூற வேண்டும். இவை அனைத்தும் விரைவில் நடக்கும் என ஜோவிகா பேசியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…