தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியலுக்கு தகுதியே இல்லாதவர் என்று பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கூறியிருக்கிறார். கரூர் துயர சம்பவம் குறித்து பேசிய அவர், 41 பேர் உயிரிழந்தது திட்டமிட்ட சதி என்றும், நரபலிக்கும் இதற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். திருவாரூரில் பரப்புரை நடந்த போது அசம்பாவிதம் நடந்திருக்கும். ஆனால் தாலுகா அலுவலகத்தை அதன் பாதுகாவலர் நெரிசலின் போது திறந்து விட்டதால் 500 பேர் உள்ளே போய் தப்பித்ததாக கூறப்பட்டது.
செந்தில் பாலாஜி விஷயத்தையும், ஆம்புலன்ஸ் விஷயத்தையும் நீதிமன்ற விவாதத்தில் வைத்தார்களா? என்று மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் கேட்டேன். அவர் இல்லை என்று தான் சொன்னார். அப்படி என்றால் திமுக தான் காரணம் என்ற பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்வது யுத்தி தான். அது 10 பேர் செத்தாலும் பரவாயில்லை. நான் பத்து ரூபாய் விஷயத்தை பேசுவேன் என்பவரிடம் எந்த நியாயத்தை பேச முடியும் என்று காட்டமாக பேசியுள்ளார்.
