செப்டம்பர் 10-ல் லண்டன் பறக்கும் CM விஜய்…. விவாகரத்து வாபஸுக்குப் பின் காத்திருக்கும் சங்கீதா…. கசிந்த ரகசிய தகவல்….!

By Nanthini on புரட்டாதி 3, 2026

Spread the love

தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் விஜய் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி பிரிட்டன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக சென்னை அண்ணா சாலையில் உள்ள வட்டார கடவுச்சீட்டு அலுவலகத்தில் (RPO) அவர் ‘டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்’ கோரி நேரில் விண்ணப்பித்துள்ளார். முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் அரசுமுறைப் பயணங்களின் போது இத்தகைய பிரத்யேக பாஸ்போர்ட்டைப் பயன்படுத்த வேண்டும் என்பதால், விஐபி நடைமுறைப் படி ஓரிரு நாட்களில் அவருக்கு இந்த பாஸ்போர்ட் வழங்கப்படவுள்ளது.

விஜய்யின் இந்த பிரிட்டன் பயணம் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களுக்கானது என்றாலும், அரசியல் மற்றும் திரை உலகில் மற்றொரு விவாதம் பரவலாக எழுந்துள்ளது. லண்டனில் வசித்து வரும் அவரது மனைவி சங்கீதாவை இந்த பயணத்தின் போது விஜய் நேரில் சந்திப்பாரா என்பதே அந்த எதிர்பார்ப்பாகும். முன்னதாக, குடும்ப நீதிமன்றத்தில் சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு மற்றும் அது சார்ந்த சர்ச்சைகள் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

   

செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது லண்டனில் இருந்து காணொளி வாயிலாக ஆஜரான சங்கீதா, தனது விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றமும் அந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. இவர்களின் மகன் ஜேசன் சஞ்சயின் முயற்சியாலும், குடும்பத்தினரின் தலையீட்டாலுமே இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

   

தற்போது சட்டப்பூர்வ சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், முதலீடுகளை ஈர்க்கும் அதிகாரப்பூர்வ பயணத்துடன் சேர்த்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மனைவி சங்கீதாவையும் விஜய் லண்டனில் சந்திக்க வாய்ப்புள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ கடமைகளுக்கிடையே இந்த சந்திப்பு நடக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.