என் மச்சான் ஆதவ்விற்கு பல பெண்களுடன் தொடர்பு… யாருக்குமே தெரியாத ஒரு விஷயத்தையும் சொல்றேன்… பகீர் கிளப்பிய ஜோஸ் சார்லஸ் மார்டின்..!

By Soundarya on சித்திரை 20, 2026

Spread the love

திருச்சி லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் லீமாரோஸின் மகனும், லட்சிய ஜனநாயக கட்சி தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனது மச்சான் ஆதவ் அர்ஜுனா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஆதவ் அர்ஜுனா தனது மாமியாரான லீமாரோஸை தேர்தலில் தோற்கடிக்கத் திட்டமிடுவதாகவும், இதற்காகத் தனது நண்பர்களுடன் இணைந்து சதித்திட்டங்களைத் தீட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சதித்திட்டங்களை முறியடித்துத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.

ஆதவ் அர்ஜுனாவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் ஒழுக்கம் குறித்துப் பேசிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அவர் திருமண உறவைத் தாண்டி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அத்தகைய பெண்களுக்குக் கார்களைப் பரிசாக வழங்கியுள்ளதாகவும், குடும்பத்தைச் சரியாகக் கவனிக்கத் தெரியாதவர் என்றும் சாடியுள்ளார். சமீபகாலமாக அவரது நடவடிக்கைகள் எதுவும் சரியாக இல்லை என்பதால் அவர் மீது தொடர்ந்து சந்தேகம் இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

ஆதவ் அர்ஜுனா குறித்த இதுவரை அறியப்படாத தகவல் ஒன்றையும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அம்பலப்படுத்தியுள்ளார். “ஆதவ் அர்ஜுனா” என்பது அவரது உண்மையான பெயர் அல்ல என்றும், அவரது அசல் பெயர் “செந்தில்குமார்” என்றும் அவர் கூறியுள்ளார். தனது பெயரிலேயே அவர் ஊழல் செய்துள்ளதாகவும், அவர் கூறும் அனைத்துத் தகவல்களும் பொய் என்றும் தனது பேட்டியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.