சேலம் மாநகர அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராக இருந்த கண்ணன் மற்றும் அவரது மகன் சஞ்சய் ஆகிய இருவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகி அமைச்சர் கே.ஏ.எஸ் முன்னிலையில் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளனர். ஈபிஎஸ் (EPS)-க்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்ட கண்ணனின் இந்த திடீர் கட்சித் தாவல், அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாகவே சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமான முக்கிய அதிமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து தவெகவில் ஐக்கியமாகி வருவது, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அதிமுக தலைமைக்கு பெரும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.
