BREAKING: “பதவி ராஜினாமா.. திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி”… ஸ்டாலின் முன்னிலையில் நடந்த ட்விஸ்ட்… TVK மீது அதிருப்தி….!

By Nanthini on வைகாசி 19, 2026

Spread the love

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அலீம் அல் புகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கொள்கை ரீதியான கூட்டணியில் பயணிக்காமல், காங்கிரஸ் தலைமை அவசரப்பட்டு TVK-வுடன் கைகோர்த்துள்ளதாகக் கடுமையாகச் சாடிய அவர், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார்.

மேலும், ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரே வாரத்திலேயே TVK அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள அலீம் அல் புகாரியின் இந்த அதிரடி அரசியல் நகர்வு, தற்போதைய கூட்டணிக் கணக்குகளிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.