தேவையில்லாததை பேசி வாங்கி கட்டிக்காதீங்க இபிஎஸ்… நமக்கு இது தேவையா?… வெளுத்து வாங்கிய ஜான்பாண்டியன்…!

By Divyamayakannan on புரட்டாதி 8, 2025

Spread the love

தமிழ்நாட்டில், 2026 இல் வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றன. அனைத்து கட்சிகளும் பல தொகுதிகளில் பிரச்சாரம் நடத்தியும் வருகிறார்கள். தற்போது அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திண்டுக்கல் மற்றும் ஆத்தூர் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் பேசியது. மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசுக்கு அதிமுக கொண்டு செல்லும். தென் மாவட்ட மக்களின் நெஞ்சில் வாழும் அவருக்கு பாரத ரத்னா விருதும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது அதிமுக.  புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது குறித்து பிரச்சாரத்தில் பேசுவது அவசியம் இல்லாதது என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஜான்பாண்டியன் கடுப்பாகி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் எவ்வளவு பிரச்சனைகள் உள்ளது அதையெல்லாம் தீர்க்காமல் மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது தான் முக்கியம் என்று நினைக்கிறார் போல எடப்பாடி பழனிச்சாமி. தேவையில்லாத வேலையை பார்க்கிறார். மக்களின் நலம் சார்ந்த விஷயங்களை மட்டும் பேசினால் நன்றாக இருக்கும். அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக மதுரை விமான நிலையத்திற்கு மந்தை திடலில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இக்கோரிக்கைக்காக தேவேந்திரகுல வேளாளர் மக்கள் இன்றுவரை போராடி வருகின்றனர்.

   

தேர்தல் பிரச்சாரத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை பற்றி பேசுவது உங்களுடைய அரசியல் பயணத்திற்கு ஆபத்தாக முடியலாம் என்று கூறியுள்ளார். அம்மையார் அவர்கள் இருக்கும் போது இது போன்ற பிரச்சனைகளை பேசியது உண்டா? அரசியல் பயணத்தில் தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும், குறுகிய எண்ணத்தில் இருப்பது ஆபத்தானது. ஒருவரின் சொந்த நிலத்தை அரசின் பயன்பாட்டிற்கு வழங்கினால் அவரின் விருப்பப்படி பெயர் வைக்கலாம். தற்போது சமூக மக்கள் விரும்பும் பெயர்களை சூட்டுவது தான் நடைமுறையில் உள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரரான தியாகி. வே. இமானுவேல் சேகரன் பெயரை சூட்டுவது தான் பொருத்தமாக இருக்கும் என்று ஜான்பாண்டியன் கூறியுள்ளார்.