தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… ஆசிரியர்களுக்கு பெரிய ஆப்பு… பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…!

By Nanthini on புரட்டாதி 8, 2025

Spread the love

தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறையின் கீழ் சுமார் 46,000 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளிகளில் சுமார் 2.85 லட்சம் ஆசிரியர்கள், 17,000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் போலி கல்வி சான்றிதழ் கொடுத்து பணியில் பலரும் சேர்ந்து உள்ளதாக புகார் எழுந்த நிலையில், அவர்கள் அனைவரையும் கண்டறிய பணியில் உள்ள அலுவலர்களின் கல்வித் தகுதியை சரிபார்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் கல்வித் தகுதி குறித்த உண்மை தன்மையை தற்போது அரசு தீவிரமாக சரிபார்த்து வருகிறது. சமீபத்தில் தொடர்ந்து ஆசிரியர் பணியில் தொடர வேண்டும் என்றால் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.