சினிமாவை தாண்டிய நட்புறவு.. கமலும் டைரக்டர் மகேந்திரனும் பிரிய இதுதான் காரணமா?.. பல வருடம் கழித்து வெளிவந்த உண்மை..!

By Nanthini on வைகாசி 2, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர்தான் மகேந்திரன். காரைக்குடியில் படித்துக் கொண்டிருந்த அவரை ஒரு விழாவில் எம்ஜிஆர் பாராட்டியதை தொடர்ந்து சினிமாவில் கதை மற்றும் வசனங்கள் எழுத ஆரம்பித்தார். அப்படி அவர் தங்கப்பதக்கம் உள்ளிட்ட படங்களுக்கு கதையும் வசனமும் எழுதினார். தன் அறிமுக காலத்திலேயே எதார்த்தமான படைப்பாளி என்ற பெயரை மகேந்திரன் பெற்றார். தொடர்ந்து அவருக்கு இயக்குனராகவும் வாய்ப்பு விரைவிலயே கிடைத்ததால் இயக்குனர் அவதாரம் எடுத்த இவர் முள்ளும் மலரும் திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படம் ரஜினிகாந்த் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

மகேந்திர மகத்துவம்! - இயக்குநர் மகேந்திரன் நினைவு நாள் | director mahendiran - hindutamil.in

   

முள்ளும் மலரும் திரைப்படத்தை தொடர்ந்து உதிரி பூக்கள், மெட்டி, நண்டு, பூட்டாத பூட்டுக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, அழகிய கண்ணே, கை கொடுக்கும் கை என ஏராளமான திரைப்படங்களை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் இன்று வரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. வயோதிகம் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக இயக்கத்தில் இருந்து ஒதுங்கியவர் நடிகராகவும் மாறினார். அதன்படி விஜய் நடித்த தெறி மற்றும் ரஜினிகாந்த் நடித்த பேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். இவருக்கு ஜான் மகேந்திரன் என்ற ஒரு மகனும் உள்ள நிலையில் தனது தந்தையைப் போலவே அவரும் ஒரு இயக்குனர் தான். விஜய்யை வைத்து சச்சின் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

   

முட்களுக்கிடையே ஒரு மலராய்.. நெஞ்சங்களை கிள்ளி.. அழியாத கோலம் போட்டு சென்ற மகேந்திரன்! | Tamil Film Director Mahendran dead - Tamil Oneindia

 

இதனைத் தவிர பல திரைப்படங்களையும் இயக்கியுள்ள ஜான் மகேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது அப்பா மகேந்திரனுக்கும் கமலுக்கும் இடையேயான நட்புறவு பற்றியும் அவர்கள் பிரிந்ததற்கான காரணம் பற்றியும் பேசி உள்ளார். அதில், தமிழ் சினிமாவுல அப்பாவுக்கும் கமலுக்கும் இருந்த நட்பு அவ்வளவு பெரியது. இருவரும் அடிக்கடி சும்மா இருக்க டைம்ல கார் எடுத்துட்டு பெங்களூர் போயி கன்னட படம் பார்த்துட்டு வருவாங்க. அதன் பிறகு படத்துல இதெல்லாம் நல்லா இருந்துச்சு அப்படின்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு அப்பா. முள்ளும் மலரும் திரைப்படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சரியா ஸ்கிரிப்ட் இல்ல படம் ஊமையாக இருக்க மாதிரி இருக்கு என்று சொன்னதும் அப்பா பேட்ச் வொர்க் கொஞ்சம் பண்ணனும் என்று சொன்னாரு.

நான் இங்கு நிற்பதற்கு கமல்தான் காரணம்”- இயக்குனர் மகேந்திரனின் நினைவுகள் | nakkheeran

இத பத்தி கமல் சார் கிட்ட பேசினதும் எத்தனை நாள் தேவை என்று கேட்டதும் அப்பா ஒரு நாள் போதும் என சொன்ன பிறகு அவரும் சரி உங்களால் முடிந்ததா நீங்க பண்ணியிருந்தேன் என்று சொல்லிட்டாரு. அந்தப் படம் எதிர்பார்த்ததைவிட நல்ல வெற்றி பெற்றது. தினமும் இருவரும் சந்தித்து பேசக்கூடிய நட்புறவு இருவருக்கும் இருந்த நிலையில் திடீரென இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட பேசாமல் விலகி விட்டனர். அந்த சமயத்தில் கமலின் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு அப்பாவுக்கு வந்த நிலையில் இரண்டு பேரும் சேர்ந்து ஒரே இடத்துல வேலை பார்த்தா நல்லா இருக்காது எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்க விருப்பமில்லை அவங்களுக்கு புடிச்ச இயக்குனர் வச்சு டைரக்ட் பண்ணிக்கட்டும் என்று சொல்லிட்டாரு.

Kamal Haasan offers condolences for Mahendran's demise; talks about his Mullum Malarum connect

அதன் பிறகு கமல் சாரின் அப்பா இறந்த சமயத்தில் என்னுடைய அப்பா மகேந்திரன் அங்கு சென்று கமல் சார் கிட்ட எதுவுமே பேசாம காலையில இருந்து இறுதி சடங்கு முடியும் வரை அவர் பக்கத்திலேயே இருந்துட்டு வந்தாரு. பிறகு இரண்டு நாள் கழித்து கமல் சார்கிட்ட இருந்து ஒரு லெட்டர் வந்துச்சு. அந்த லெட்டரில், உண்மையிலேயே நீங்க பண்ணது பெரிய விஷயம் தான். நீங்க எனக்கு வந்து ஆறுதல் எதுவும் சொல்லல தோள் மேல கை போட்டு எதுவும் பேசல எல்லாத்துக்கும் மேல என்ன கலங்க வைக்கிற மாதிரி ஒரு அண்ணனா என் கூடவே இருந்து எல்லாத்தையும் பண்ணி கொடுத்துட்டு போனீங்க. இதை என்னைக்குமே நான் மறக்கவே மாட்டேன் என்று கமல் சார் எமோஷனலாக அந்த லெட்டரை எழுதி இருந்தார். என்னதான் இருவருக்கும் மனக்கசப்பு இருந்தாலும் இந்த நட்புறவு இருவருக்குள்ளும் தொடர்ந்து இருந்தது என ஜான் மகேந்திரன் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.