அரசு வேலையில் சேர வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பற்றிய செய்திகள் வெளியிட்டுக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டின் மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. அதைப்பற்றி இனி காண்போம்.
தமிழ்நாடு மின்சாரத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலி இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த காலி பணியிடங்கள் என்னவென்றால், கம்பெனி செகரட்டரி- 1 இன்டர்மீடியட் பாஸ்ட் CS-4 மொத்தம் ஐந்து பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த பணியிடங்கள் ஒப்பந்த முறையில் ஓராண்டுகள் நிரப்பப்படுகிறது.
சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு மேலும் இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படும். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் படி கம்பெனி செகிரேட்டரி ஆன நிறுவன செயலாளர் பதவிக்கு குறைந்தபட்சம் 30 வயது கடந்து இருக்க வேண்டும். CS பதவிக்கு குறைந்தபட்சம் 22 வயது வரை இருக்க வேண்டும். இந்த காலி பணியிடங்களுக்கு நிறுவன செயலாளர் பதவிக்கு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் ICSI இல் உறுப்பினராக பதிவு செய்திருக்க வேண்டும். CS பதவிக்கு பட்டப்படிப்பு மற்றும் ICSI இல் தகுதி பெற்றிருக்க வேண்டும். நிறுவன செயலர் பதவிக்கு மாதம் ஒரு லட்சம் சம்பளமும் சி எஸ் பதவிக்கு மாதம் 20 ஆயிரம் சம்பளமும் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணைக்க விரும்புகிறவர்கள் https://www.tnpdcl.org/en/tnpdcl/ என்ற இணையதளத்தை பார்வையிட்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 30 ஆகும்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…