மாதம் 35,000 ஆரம்ப சம்பளம்….! தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்…. மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க…!!

By Devi Ramu on மார்கழி 25, 2025

Spread the love

தமிழக அரசுக்கு உட்பட்ட கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) உதவியாளர், ஓட்டுநர் மற்றும் பண்ணை மேலாளர் உள்ளிட்ட 60 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் பதவிக்கு ஏற்ப மாதம் குறைந்தபட்சம் ரூ.18,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,77,500 வரை ஊதியம் வழங்கப்படும். 18 முதல் 32 வயதுடைய ஆர்வமுள்ள நபர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

   

இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் அல்லாமல், தபால் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் “இயக்குநர், விரிவாக்கக் கல்வி இயக்ககம், மாதவரம் பால் பண்ணை, சென்னை – 600051” என்ற முகவரிக்கு ஜனவரி 12, 2026 மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

   

பொதுப்பிரிவினருக்கு ரூ.500 மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும்.