தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். இவர் இயக்குனர்கள் கதிர் மற்றும் வின்செண்ட் செல்வா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து அஞ்சாதே, நந்த லாலா, பிசாசு, சைகோ, துப்பறிவாளன் டேட் ஆப் பர்த் திரைப்படங்களை இயக்கினார். இவர் தன்னுடைய படங்களில் வித்தியாசமான திரைமொழியைக் கையாண்டு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வைத்துள்ளார். இவர் படங்களில் வசனங்களை விட காட்சிப்பூர்வமான அர்த்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.
அதனால் அவர் படக்காட்சிகளைப் பார்த்தாலே அது அவருடைய படம்தான் என்பதை ஒரு திரைப்பட பார்வையாளானால் புரிந்துகொள்ள முடியும். இப்படி மிஷ்கின் தொடர்ச்சியாக நல்ல படங்களைக் கொடுத்து வந்தாலும் சில நேரங்களில் அவர் சொதப்பியதும் உண்டு. அப்படி அவர் சினிமா கேரியரில் அட்டர் ப்ளாப் ஆன படம் என்றால் அது அவர் இயக்கிய முகமூடி திரைப்படம்தான்.
இந்த படத்தை அவர் முதலில் சூர்யாவை வைத்துதான் இயக்க இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த கதை மேல் நம்பிக்கை இல்லாததாலோ என்னவோ சூர்யா விலகிவிட்டார். அதன் பின்னர்தான் ஜீவா வந்துள்ளார். அவரும் ஆர்வமாக நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங் நடக்கும்போதே அவருக்கு நம்பிக்கைக் குறைய ஆரம்பித்துவிட்டதாம். க்ளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்ட போது அவர் தயாரிப்பாளருக்கு போன் செய்து “இது வொர்க் அவுட் ஆகாது” என சொல்லிவிட்டாராம்.
இதுபற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன் ”அப்போது மிஷ்கின் சார் எடுத்திருந்த யுத்தம் செய் ஹிட்டாகி இருந்தது. அதனால் அவர் யார் பேச்சையும் கேட்கும் மனநிலையில் இல்லை. நான் அவரிடம் ‘படத்துக்கு நல்ல ஹைப் இருக்கு. இந்த க்ளைமேக்ஸ் அதுக்கு பத்தாது. வேறொரு க்ளைமேக்ஸ் காட்சியை படமாக்கலாம்’ என சொன்னேன். ஆனால் அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதுதான் க்ளைமேக்ஸ் என உறுதியாக இருந்தார்.” என ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.