‘என்னது தனுஷுக்கு நான் அம்மாவா… அதெல்லாம் முடியாது’ – பொல்லாதவன் படத்தில் நடந்த சுவாரஸ்யங்களைப் பகிர்ந்த அஞ்சு!

By vinoth on ஆடி 8, 2024

Spread the love

நடிகை பேபி அஞ்சு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழில் உதிரிப்பூக்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 2. தமிழ் மட்டும் இல்லாமல் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 1988-ஆம் ஆண்டு ருக்மணி படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரளா அரசு திரைப்பட விருது அவருக்கு வழங்கப்பட்டது. தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி, செல்வி, மகராசி ஆகிய சீரியல்களில் பேபி அஞ்சு நடித்துள்ளார். சமீபத்தில் பேபி அஞ்சு அளித்த பேட்டியில் கூறியதாவது, பிரபல கன்னட நடிகர் ஆன டைகர் பிரபாகரனை 17 வயதில் நான் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்துகொண்டார்.

   

ஆனால் அவருடனான திருமண உறவு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அவரை விவாகரத்து செய்துவிட்டு தனது குழந்தையோடு தனியாக வாழ்ந்து வருகிறார். அதன் பிறகு அவருக்கு சினிமாவில் ரி எண்ட்ரியாக அமைந்தது பொல்லாதவன் படம்தான். வெற்றிமாறன் இயக்கிய அந்த படத்தில் கிஷோரின் மனைவியாக பக்கா நார்த் மெட்ராஸ் பெண்ணாக அந்த பகுதி மொழியைப் பேசி சிறப்பாக நடித்திருந்தார்.

   

முதலில் இந்த படத்தில் பானுபிரியா நடித்த தனுஷின் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க அவரை அழைத்துள்ளார்கள். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் எல்லாம் தன்னால் நடிக்க முடியாது என அஞ்சு மறுத்துவிடவே, அதன் பிறகுதான் வில்லனின் மனைவி வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

 

அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு விதவிதமாக மேக்கப் எல்லாம் போட்டு பார்த்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். ஆனால் எதுவுமே செட் ஆகாமல் கடைசியாக அவருக்கு மேக்கப்பே வேண்டாம் என்று “ஹவுஸிங் போர்ட்டில் வெள்ளையாக ஒரு பெண் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்” என சொல்லிவிட்டாராம். அதன்பிறகு அவர் இயல்பான லுக்கில் அந்த படத்தில் நடித்தாராம்.

அந்த படத்தில் நடிக்கும் போது வெற்றிமாறன் “இந்த கதாபாத்திரம் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கவேண்டும். ஆனால் அதே நேரத்தில் சர்ட்டிள் ஆகவும் இருக்கவேண்டும்.” என சொல்வார். அதைக் கேட்டதுடன் எனக்குக் குழப்பமாகி விடும் எனக் கூறியுள்ளார். மேலும் வட சென்னை படத்தில் நடிக்கவும் என்னை அவர் தேடியுள்ளார். ஆனால் நான் அப்போது கேரளாவில் இருந்ததால் என்னை அவரால் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு போனது.